Tuesday, July 19, 2011

நீங்கா நினைவுகள்!

நெடுநாளாய் என் வாழ்வில் நீ மறைந்து போகக் கண்டும்
நிழல் போலே உன் நினைவோ நித்தம் என்னைத்  தொடருவதேன்!

Monday, February 21, 2011

புரிந்தும் புரியவில்லையே!

நடவாது, அவளோடு உன் வாழ்வு, இனி நீயும்,
நடை போடு புதிதான ஒரு வாழ்க்கைக் கனவோடு,
சொன்னான் ஒரு தோழன்!

திரும்பாது, நீ இழக்கும் மணித்துளிகள், இனிமேலும்,
தொலைக்காதே! அவள் நினைவில், வருங் காலம்,
தடுத்த தெந்தன் சுற்றம்!

பயனில்லை, நினைவோடு உறவாடும் இக்கோலம், மூடா,
நினைவில்லை! இனிதான நொடி யொன்றும் அவளோடு,
கத றியதென் உள்ளம்!

கணையாகி என் நெஞ்சில் இவையாவும் பாய்ந்த பின்னும்,
நிலையாகி நிற்பதுவோ, மனதில் உந்தன் பிம்பமே!
சேர வாய்ப்பும் அமையாதோ! சிதைக்கிற தென் எண்ணமே!

Sunday, February 13, 2011

இதுவும் ஓர் வாழ்க்கையா!

நினைத்து நினைத்து ஏங்காத நாளும் இல்லை,
உன்  நினைவு என்னை தீண்டாத கணமும் இல்லை,
இமைகள் ரெண்டும் கலங்காத இரவும் இல்லை,
நீ இல்லாத இவ்வாழ்வில் நிறைவும் இல்லை!

இறந்தகாலம் நினைவு செய்யா பொருளும் இல்லை,
கூடி இருந்த காலம் மறக்கச் செய்ய மருந்தும் இல்லை!
கண்ணீரை துடைத்து விட கையும் இல்லை, இரவில்,
கவலை மறந்து தலை சாய்க்க மடியும் இல்லை!

அழியாக் கனவுகள்!

மணிக்கணக்கில் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்த நாட்கள் சென்று,
மலர் போலும் கண்மணியின் சிமிட்டில் சிரித்த கணங்கள் சென்று,
மெல்லிடையாள் கரம் பற்றி சிலிர் சிலிர்த்த மையல் சென்று,
மகரந்தப் பூவுந்தன் வாசம் நுகர்ந்த பொழுதும் சென்று,
மடி மீது மகள் போலே தலை சாய்த்த இரவும் சென்று,
மனையாளாய் வரும் நாளும் வருமென்ற கனவும் சென்று,
மரக்கட்டை போல் நானும் அசைவற்றுக் கிடக்கின்றேன்!
மதி மயங்கி உன் நினைவால் மனதுக்குள் சாகின்றேன்!

காலம் கூட சுருங்கியதோ!

முன்னூறு வருடங்கள் சேர்ந்திருந்த நினைவெல்லாம்,
முப்பத்தே நொடிபோலே மனக்கண் முன் அரங்கேறி,
முள்போல என் நெஞ்சை குத்திக் குத்திக் கிழிப்பத்துமேன்!